- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்த ஒரு மாசத்துக்கு இந்திய அணி எந்த போட்டியிலும் விளையாடப்போவதில்லை – ஏன் தெரியுமா?

அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் நாடுகளில் நடைபெற்ற டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆவது முறையாக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனானது. பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அங்கிருந்து ஜிம்பாப்வே சென்றிருந்த இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடரையும் கைப்பற்றி அசத்தி இருந்தது. அந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே பங்கேற்றது.

அதனைத்தொடர்ந்து அடுத்ததாக இலங்கை நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி அந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது.

- Advertisement -

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. இதனால் இந்த தோல்வி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இந்த இலங்கை தொடருக்கு அடுத்து அடுத்ததாக கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அடுத்தாக இந்திய செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

- Advertisement -

அதற்கு முன்னர் அடுத்த 40 நாட்களுக்கு இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் விளையாடாது என்று அட்டவணை வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் என இந்திய வீரர்கள் அனைவரும் ஓய்வின்றி விளையாடினர்.

இதையும் படிங்க : 196 ரன்ஸ் அடிச்ச அப்றம் அந்த இந்திய வீரர் மாதிரி விளையாடிருந்தா.. இந்தியாவை தோற்கடிச்சுருப்பேன்.. ஓலி போப்

அதுதவிர்த்து டி20 உலககோப்பை தொடர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் அதன்பின்னர் இலங்கை அணிக்கெதிரான தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி இந்திய வீரர்கள் பங்கேற்றதால் அவர்களுக்கு ஒரு நீண்ட ஓய்வினை வழங்கவே இந்திய நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -