IND vs NZ :எப்படியும் ஒருநாள் தொடரை ஜெயிக்க முடியாது. கவுரமா இதையாவது பண்ணுங்க – நடக்குமா?

IND-vs-NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 25-ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணியானது தொடரில் ஒரு வெற்றியுடன் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs NZ 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஹேமில்டன் நகரில் நடைபெற்ற வேளையில் முதல் பாதியிலேயே மழை பெய்ததன் காரணமாக போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி கைவிடப்பட்டதாக அணிவிக்கப்பட்டது. அதனால் நியூசிலாந்து அணி தொடர்ந்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது வரும் 30-ஆம் தேதி கிரிஸ்ட்சர்ச்சில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில் மழையின் காரணமாக கைவிடப்பட்டதால் இந்திய அணி இந்த தொடரை ஜெயிக்க வாய்ப்பு இல்லை.

Abandoned

எனவே கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்திய அணியால் சமன் செய்ய முடியும். ஒரு வேளை மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்க்கும் பட்சத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தல தோனிக்கு நெருக்கமான வீரரான இவரே டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்க தகுதியானவர் – அஷ்வின் கருத்து

எனவே இந்த ஒருநாள் தொடரை வெற்றி பெற முடியாமல் போனாலும் பரவாயில்லை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தால் போதும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை நடைபெற உள்ள வேளையில் இந்த நியூசிலாந்து தொடரில் அனைத்து வீரர்களின் ஆட்டமும் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement