2019 ஆம் ஆண்டிற்கு பிறகு 15 தொடரில் 13 நமக்கு தான்.. அசைக்க முடியா அணியாக வலம் வரும் – இந்திய அணி (விவரம் இதோ)

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கண்ட போது இந்திய அணி டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தும், ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலி நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து நேற்று ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது.

இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதோடு ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரையும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கைப்பற்றியிருந்தது.

- Advertisement -

இப்படி இந்திய மண்ணில் இந்திய அணி அடுத்தடுத்து பெற்று வரும் வெற்றிகளின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான ஒரு வெற்றிநடையை போட்டு அசைக்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆம், அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இதுவரை இந்திய மண்ணில் விளையாடியுள்ள 15 டி20 தொடர்களில் 13 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை தொடரை சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய ரசிகர்களே படுக்க வைக்க தயாரா இருக்காங்க.. இங்கிலாந்தை எச்சரித்த நாசர் ஹுசைன்

ஆனால் ஒரு முறை கூட டி20 தொடரை இந்திய அணி இந்திய மண்ணில் இந்த கடந்த நான்கு ஆண்டுகளாக தோற்றதே இல்லை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரே இந்திய அணிக்கு கடைசி சர்வதேச டி20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement