நெதர்லாந்து அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் ஏற்படவுள்ள பல்வேறு மாற்றங்கள் – விவரம் இதோ

IND vs NED
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா, நமீபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையிலேயே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்தது.

கடைசி லீக் போட்டியில் ஏற்படவுள்ள பல்வேறு மாற்றங்கள் :

அதனை தொடர்ந்து இந்த லீக் சுற்று ஆட்டங்களில் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் இந்திய அணி நாளை விளையாட இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 18-ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதிசெய்து விட்டதால் லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.

ஏனெனில் அடுத்து சூப்பர் 8 சுற்று போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் என முக்கியமான ஆட்டங்கள் இருப்பதால் இந்த முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோன்று மற்றொரு மாற்றமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கும் ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அவரது பங்களிப்பும் இனிவரும் போட்டிகளில் முக்கியம் என்பதால் தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடிய அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தை தவறவிட இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா – என்ன காரணம்?

அதேபோன்று மூன்றாவது மாற்றமாக தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு வழங்கப்பட்டு குல்தீப் யாதவ் அவரது இடத்தில் விளையாடலாம் என்று தெரிகிறது. இப்படி குறிப்பிட்ட பல்வேறு மாற்றங்கள் நிச்சயம் கடைசி லீக் போட்டியில் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement