சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் நடப்பு சாம்பியனாக இடம் பிடித்துள்ள இந்திய அணியானது தற்போது லீக் சுற்றில் தாங்கள் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
கடைசி போட்டியை தவறவிடும் ஜஸ்ப்ரீத் பும்ரா :
இந்த மூன்று ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏ பிரிவில் முதல் அணியாக ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அதனை தொடர்ந்து இந்த லீக் சுற்றின் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வியை சந்தித்தாலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதனால் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு சாதாரணமான ஆட்டமாக மாறியுள்ளது. இவ்வேளையில் இந்த கடைசி லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே பணிச்சுமை காரணமாகவும், காயம் காரணமாகவும் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதலாவது போட்டியை காய்ச்சல் காரணமாக தவற விட்டிருந்த அவர் அதற்கடுத்து நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : மழையால் ரத்தான ஜிம்பாப்வே ஐயர்லாந்து போட்டி.. அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலியா – விவரம் இதோ
இந்நிலையில் இந்த லீக் சுற்றின் கடைசி போட்டியில் பும்ரா ஓய்வெடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் இணைந்து விளையாடுவார். சூப்பர் 8 சுற்றுப்போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் என அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்த கடைசி போட்டியில் அவர் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.



