இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் ஏற்படவுள்ள 2 முக்கிய மாற்றங்கள் – விவரம் இதோ

IND-vs-SL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கையில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இலங்கை அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்ய முடியும். இந்திய அணி ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இந்த தொடரை இலங்கை அணியிடம் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய மூன்றாவது ஆட்டத்தை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த இரண்டு போட்டிகளாக சொதப்பி வரும் துவக்க வீரர் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதே போன்று மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் ஆல்ரவுண்டான ஷிவம் துபேவிற்கு பதிலாக சுழற்பந்துவீச்சு தெரிந்த பேட்ஸ்மேனான ரியான் பராக் சேர்க்கப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக ரிஷப் பண்ட் இடம் பிடிக்க அதிகவாய்ப்புள்ளது. அந்த வகையில் இன்றைய மூன்றாவது போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சத்தமில்லாமல் சரிவை சந்தித்து வரும் விராட் கோலி.. 15 ஆட்டங்களாக ஏற்பட்டுள்ள ஏமாற்றம் – மீண்டும் பார்முக்கு திரும்புவாரா?

இருப்பினும் இந்த முடிவுகள் ஒரு தொடரில் அதிக மாற்றங்களை விரும்பாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரது கைகளிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement