IND vs SL : அதான் கப் ஜெயிச்சாச்சு இல்ல. 3 ஆவது போட்டிக்கான அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை ஜனவரி 15-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது.

INDvsSL

இந்த கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை வாஷ்அவுட் செய்யும் முனைப்டன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலை தேட இலங்கை அணியும் முனைப்பு காட்ட இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றி விட்டதால் நாளைய இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shubman Gill and SKY

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் நாளைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று ஆல் ரவுண்டராக செயல்பட்டு வரும் அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அந்த இடத்தில் தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம் என்று தெரிகிறது.

மேலும் வேகப்பந்துவீச்சில் உம்ரான் மாலிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs AUS : சூரியகுமாருக்காக அவர புறக்கணித்து ரஞ்சி கோப்பையை அவமான படுத்துறீங்க – ரசிகர்கள் கோபம்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) முகமது ஷமி, 9) முகமது சிராஜ், 10) குல்தீப் யாதவ், 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement