IND vs AUS : சூரியகுமாருக்காக அவர புறக்கணித்து ரஞ்சி கோப்பையை அவமான படுத்துறீங்க – ரசிகர்கள் கோபம்

Suryakumar Yadav Ranji
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.

அதில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி போராடி வரும் பிரிதிவி ஷா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல் டெஸ்ட் தொடருக்கான அணியில் முதல் முறையாக இசான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட போகும் கேஎஸ் பரத்துக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதெல்லாம் அவமானம்:
அதே போல் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் மிரட்டலாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள சூரியகுமார் யாதவ் தற்சமயத்தில் இருக்கும் பார்மை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ரஞ்சி கோப்பையிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அதிரடியாக விளையாடிய காரணத்தால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இருப்பினும் அவருக்காக அவரை விட ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் மற்றொரு இளம் வீரர் சர்ப்ராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது எந்த ரசிகரையுமே மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு வரும் அவர் 2019 முதல் 9 சதங்கள் 5 அரை சதங்கள் உட்பட 2289 ரன்களை 134.64 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.

- Advertisement -

இருப்பினும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட அவர் கடந்த வருடம் ஒரு போட்டியில் சதமடித்த போது இந்தியாவுக்கு விளையாட நான் இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று கலங்கிய கண்களுடன் கொண்டாடியது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. மேலும் தொடர்ந்து அசத்தி வரும் அவர் குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு பின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் உலக சாதனையையும் தகர்த்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது சமீப காலங்களாகவே ரசிகர்களை கோபமடை வைத்து வருகிறது.

ஆனாலும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் செயல்பாடுகளால் மிரட்டும் அவர் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் 431 ரன்களை 107.75 என்ற சாராசரியில் விளாசி தொடர்ந்து தேர்வுக்குழுவின் கதவை தட்டி வருகிறார். ஆனால் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அற்புதமான ஃபார்மில் இருந்தும் மீண்டும் இந்த முக்கியமான தொடரில் அவரை தேர்வுக்குழு கண்டுகொள்ளாதது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள சூரியகுமார் நல்ல பார்மில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் அவரை விட சர்ப்ராஸ் கான் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இஷான் கிசான் 38.76 என்ற சராசரியையும் சூரியகுமார் 75 என்ற சராசரியையும் வைத்துள்ள நிலையில் சர்ப்ராஸ் கான் 80.47 என்ற அபாரமான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். ஆனாலும் அவரை கழற்றி விட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் மற்றும் இசான் கிசானை தேர்வு செய்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சிகோப்பையை அவமானப் படுத்தியது போல் உள்ளதாக இந்திய தேர்வுக்குழுவை ரசிகர்கள் விளாசுகின்றனர்.

இதையும் படிங்க: போதும் சாமி எனக்கு இந்தியாவே வேணாம் ஆள விடுங்க – முரளி விஜய் ஆதங்கம், ரசிகர்கள் பதிலடி

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு டெஸ்ட் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை தானே கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கும் ரசிகர்கள் இந்திய அணியில் இதே போல் குளறுபடிகள் நடைபெறுவது வாடிக்கையாக விட்டதாகவும் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement