
டிசம்பர் 14-ஆம் தேதியான இன்று பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது துவங்கியது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
அதேபோன்று கடந்த முறை இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வியை தழுவியதால் அவர்களும் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போட்டியின் முதல் நாளான இன்று டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி போட்டியின் முதல் நாளான இன்று 13.2 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் குவித்துள்ளது. ஆனால் இந்த போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் துவங்காமல் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள நான்கு நாட்களும் ஆட்டம் முழுவதுமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முதல் நான்கு நாட்களில் மழை பாதிப்பு இருக்கும் என்று வானிலை அறிவிக்க வெளியாகியுள்ளதால் இந்த போட்டி முற்றிலுமாக நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடிவடையும் பட்சத்தில் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல என்ன வாய்ப்பு இருக்கிறது? ஒருவேளை இந்த போட்டி டிராவானால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.
இதையும் படிங்க : டாஸ் வென்றதும் தைரியமான முடிவை கையிலெடுத்த ரோஹித் சர்மா.. 39 ஆண்டுகளுக்கு பின் – நடந்த சம்பவம்
அந்த வகையில் ஏற்கனவே இந்து தொடரின் இரண்டாவது போட்டியை இந்திய அணி இழந்துள்ளதால் இனி வரும் மூன்று ஆட்டங்களில் 2 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒருவேளை இந்த போட்டி டிராவாகும் பட்சத்தில் கட்டாயம் இந்திய அணி நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.