இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல்நாள் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட வேளையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இப்போதும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு :
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியானது 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் என்கிற பிரம்மாண்ட முன்னிலையை பெற்றது. அதனை தொடர்ந்து 356 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 12 ரன்கள் மட்டுமே பின்நிலை பெற்றுள்ள வேளையில் இந்திய அணிக்கு தற்போதும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்திய அணி இந்த நான்காம் நாளில் என்ன செய்தால் வெற்றி பெற முடியும் என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் தற்போது நிலையில் ரிஷப் பண்ட் 53 ரன்களுடனும், சர்பராஸ் கான் 125 ரன்களுடனும் இருக்கும் வேளையில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு தங்கள் வசம் வைத்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த நான்காம் நாள் ஆட்டத்தில் மீதமுள்ள செஷன்களில் இந்திய அணி மேலும் 300 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி கிட்டத்தட்ட 275 முதல் 300 ரன்கள் வரை முன்னிலை பெறும்.
அப்படி 300 ரன்கள் வரை முன்னிலை பெறும் பட்டத்தில் கட்டாயம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதுவும் கடைசி நாளில் அந்த ரன்களை தூரத்துவது கடினம். அதோடு இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் அவர்களை பயன்படுத்தி விரைவில் இந்திய அணியால் வெற்றிபெற முடியும்.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பில்லை – காரணம் இதுதான்
தற்போதைக்கு இந்திய அணிக்கு தேவையானது அடுத்த 100 ரன்களுக்கு சர்ஃபாஸ் கானும், ரிஷப் பண்ட்டும் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும். அதன் பின்னர் கே.எல் ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சேர்ந்து ஒரு 150 ரன்கள் வரை குவிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி 300 ரன்கள் முன்னிலை பெறும். அப்படி 300 ரன்கள் முன்னிலை பெற்றால் இந்திய அணியின் வெற்றி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.



