IND vs ENG : இதுவரை இல்லாத வரலாற்று சாதனையை படைக்க இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூலை 1) துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கும் வேளையில் இந்த கடைசி போட்டியிலும் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதே நேரத்தில் தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

INDvsENG

- Advertisement -

இதன்காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி டெஸ்ட் போட்டி தற்போது படு சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் இந்திய அணி ஒரு வரலாற்று சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக நிகழ்த்த பொன்னான வாய்ப்பு உள்ளதால் அதனை பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

அதன்படி இதற்கு முன்னதாக இந்திய அணி ராகுல் டிராவிடின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு பயணித்தபோது அந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து இதுவரை 15 ஆண்டுகாலமாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை.

எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதோடு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றுள்ள ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது.

- Advertisement -

எனவே இந்த போட்டியில் இந்திய அணி ஒருவேளை வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளை வென்ற அணியாக மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறது. இந்த தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா ஏற்கனவே பயிற்சி போட்டியில் விளையாடிய போது ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க : அந்த இடத்தில் அடிவாங்கிய வார்னர், கபில் தேவை முந்தி ஆஸி வீரர் சாதனை, இலங்கை படுதோல்வி – முழுவிவரம்

இதன் காரணமாக அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக முதல்முறையாக செயல்பட்டு வருகிறார். அதே வேளையில் துவக்க வீரரான ரோஹித்துக்கு பதில் புஜாரா துவக்க வீரராகவும், மூன்றாவது இடத்தில் ஹனுமா விஹாரியும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement