போன வருடம் செய்த சம்பவத்தை தூக்கி சாப்பிட்டு இன்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய – இந்திய அணி

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி படைத்த புதிய சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விளையாடிய வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

- Advertisement -

அதன் பின்னர் முதல்நாள் ஆட்டம் நடைபெறாத வேளையில் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை இன்று விளையாடி வருகிறது.

இந்த போட்டியின் ஐந்தாவது நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் முதலில் இந்திய அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே வங்கதேச பவுலர்களை அடித்து விளையாடினர். இந்த போட்டியின் முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது ஜோடி சாதனையை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. ஏற்கனவே இந்திய அணி கடந்த ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 12.2 ஓவர்களில் 100 ரன்கள் கடந்து இருந்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : 18 பந்தில் 50.. 61 பந்தில் 100.. இந்தியா 147 வருட வரலாறு காணாத உலக சாதனை.. இங்கிலாந்தை நொறுக்கி மிரட்டல்

இந்நிலையில் இந்த போட்டியில் அந்த சாதனையை முறியடித்துள்ள இந்திய அணி 10.1 ஓவரிலேயே 100 ரன்களை குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளது இந்த போட்டியில் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்த வேளையில் தொடர்ந்து இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

Advertisement