பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் மாபெரும் சாதனையை முறியடித்த – இந்திய அணி

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இந்த போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்த இந்திய அணி :

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் மகத்தான சாதனை ஒன்றிணையும் தற்போது இந்திய அணி ஐசிசி தொடர்களில் முறியடித்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தொடர்ச்சியான 11-வது வெற்றியாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் டி20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி வெற்றிகளை குவித்திருந்தது.

இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக ஐசிசி நடத்திய தொடர்களில் தொடர்ச்சியான 16-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற காலகட்டத்தில் ஐசிசி நடத்திய போட்டிகளில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இதுவே ஐசிசி தொடர்களில் ஒரு அணி பெற்ற தொடர்ச்சியான அதிகபட்ச வெற்றியாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : கவுதம் கம்பீரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்திய இஷான் கிஷன் – விவரம் இதோ

இவ்வேளையில் தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ள இந்திய அணி 2024 உலகக்கோப்பை, 2025 ஆசிய கோப்பை தொடர் மற்றும் இந்த 2026 டி20 உலககோப்பை என அனைத்து ஐ.சி.சி தொடர்களையும் சேர்த்து 16-ஆவது வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியா அணியின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement