இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 77 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கம்பீரின் சாதனையை முறியடித்த இஷான் கிஷன் :
சுழற்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமான இந்த மைதானத்தில் போட்டியின் ஆரம்பத்தில் பந்துகளை அடிப்பது மிக கடினமாக இருந்த வேளையில் இஷான் கிஷன் மட்டும் அதிரடியாக விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மற்ற வீரர்கள் எல்லாம் இந்த மைதானத்தில் பௌண்டரிகளை அடிக்க தடுமாறிய வேளையில் மொத்தமாக 13 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தி இருந்தார்.
அதோடு அவரது இந்த சிறப்பான ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டதால் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 77 ரன்கள் அடித்ததன் மூலம் முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீரின் சாதனை ஒன்றினையும் இஷான் கிஷன் முறியடித்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துகிறது.
அந்த வகையில் இஷான் கிஷன் நிகழ்த்திய சாதனை யாதெனில் : பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராத் கோலி 82 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து கவுதம் 75 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிராக நாங்க தோத்திருந்தாலும் நாங்க நம்பிக்கை இழக்க மாட்டோம் – பாகிஸ்தான் கேப்டன் பேட்டி
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அவரது சாதனையை கடந்த இஷான் கிஷன் 77 அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீரராக விராட் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.



