முதல் டெஸ்ட் : தெ.ஆ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மட்டுமின்றி அசத்தலான சாதனை படைத்த இந்திய அணி

Ashwin
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணியானது இன்று 5 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

siraj

இந்த இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இப்படி இரண்டாம் நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் தென் ஆப்பிரிக்க அணியை அவர்களது மண்ணில் வீழ்த்தி தற்போது இந்திய அணி புதிய சாதனையுடன் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

IND

அதாவது ஆசியாவுக்கு வெளியே மட்டும் நடப்பு ஆண்டில் 4 டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன், இங்கிலாந்தின் ஓவல் மற்றும் லார்ட்ஸ், தென்னாப்பிரிக்காவில் செஞ்சுரியன் இப்படி ஆசிய கண்டத்திற்கு வெளியே இந்த ஆண்டு மட்டும் 4 மைதானங்களில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி செய்யும் இந்த தவறை திருத்திக்கொண்டால் போதும் – பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஓபன்டாக்

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டை என்று பார்க்கப்பட்ட கஃபா மைதானத்திலும், இங்கிலாந்தின் கோட்டை என்று பார்க்கப்படும் லார்ட்ஸ் மைதானத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என்று பார்க்கப்படும் செஞ்சூரியன் மைதானம் என அனைத்திலும் இந்திய அணி தங்களது வெற்றிக் கொடியை நாட்டி உள்ளதால் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை இந்திய அணிக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement