2 ஆவது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முன்னேற்றம் – இந்திய அணி எத்தனையாவது இடம் தெரியுமா?

IND
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்ட இந்திய அணி இன்று தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணியானது முதல் போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் ஐந்தாவது இடத்திற்கு சரிந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த இரண்டாவது போட்டியில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் தற்போது புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அந்த வகையில் முதல் போட்டிக்கு பின்னர் ஐந்தாம் இடத்தில் இருந்த இந்திய அணியானது தற்போது மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த புள்ளி பட்டியலில் 55 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியானது 52.7 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 25 சதவீத புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளது.

இதையும் படிங்க : ஜெயிச்சுட்டோம்ன்னு சந்தோசம் வேண்டாம்.. தொடரை வெல்ல அதுல முன்னேறனும்.. இந்திய அணியை எச்சரித்த ஜஹீர் கான்

மேலும் இந்த தொடரின் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளும் முடியும் தருவாயில் இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். ஏற்கனவே இருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிவரை சென்றிருந்த இந்திய அணி இருமுறையும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement