ஜெயிச்சுட்டோம்ன்னு சந்தோசம் வேண்டாம்.. தொடரை வெல்ல அதுல முன்னேறனும்.. இந்திய அணியை எச்சரித்த ஜஹீர் கான்

Zaheer Khan
- Advertisement -

தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு தக்க அதிரடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ள இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளிலும் வெல்லும் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் கடந்த காலங்களில் முதல் போட்டியில் தோற்றாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் வென்றதால் இந்திய அணி மகிழ்ச்சியுடன் அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது என முன்னாள் வீரர் ஜஹீர் கான் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
குறிப்பாக ஜெய்ஸ்வால், கில் ஆகியோரை தவிர்த்து யாருமே ரன்கள் அடிக்காததால் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் வெல்வதற்கு பேட்டிங் துறையில் முன்னேற்றம் தேவைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “தொடரின் முதல் போட்டியில் நீங்கள் தோல்வியை சந்தித்தால் ஆக்ரோசமாக போராடி தன்னம்பிக்கையுடன் 1 – 1 என்ற கணக்கில் பதிலடி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்”

“அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் தன்னுடைய வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வரும் திறமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் இந்த அணியை நீங்கள் பார்க்கும் போது சில பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக பேட்டிங் துறையை பற்றி நாம் பேசுகிறோம். ஏனெனில் கடந்த காலங்களில் இந்த சூழ்நிலைகளில் இது போன்ற மைதானங்களில் இந்திய அணி இந்தியா சிறப்பாக செயல்பட்டதை நாம் பார்த்துள்ளோம்”

- Advertisement -

“இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை நீங்கள் பார்க்கும் போது அவர்கள் ஒரு அரை சதத்தை மட்டுமே வைத்து ஏறத்தாழ 300 ரன்கள் அடித்தனர். அதுதான் அனைவரும் சேர்ந்து செயல்படும் போது கிடைக்கும் முடிவாகும். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் – கில் ஆகியோர் அபாரமான இன்னிங்ஸ் விளையாடினர். ஆனால் அவர்களை தவிர்த்து யாரும் அடிக்காததால் பேட்டிங்கில் நாம் இன்னும் வேலை செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ராவை விட ஆட்டநாயகன் விருதை அவருக்கு குடுத்திருந்தா தான் சரியா இருந்திருக்கும் – ரசிகர்கள் ஆதங்கம்

“அதே போல பவுலிங் துறையிலும் பும்ரா அபாரமாக செயல்பட்டார். ஆனால் இது போன்ற மைதானங்களில் நம்முடைய ஸ்பின்னர்கள் நிறைய தருணங்களில் அழுத்தத்தை சந்திக்கிறார்கள். அவர்கள் சிறந்து விளங்குவதற்கு நம்முடைய பேட்ஸ்மேன்களின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு கேப்டன் செயலில் இறங்க வேண்டும். அதை செய்ய வேண்டிய சூழ்நிலையில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படக்கூடியவர்” என்று கூறினார்.

Advertisement