இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்

IND vs ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. அடுத்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்த தொடர் அமையவுள்ளதால் இந்திய அணிக்கு இந்த தொடரானது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? :

அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறி விட்டதால் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பிடிப்பார்கள்? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்? என்பது போன்ற பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்துள்ளன.

- Advertisement -

தற்போது வரை வெளியான தகவலின்படி : இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் பதவிக்கு சுப்மன் கில், ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல் ராகுல் ஆகியோர் போட்டிக்கு இருக்கும் வேளையில் சுப்மன் கில் தான் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதோடு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

தற்போதைய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா தவிர்த்து மற்ற அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் இந்த டெஸ்ட் தொடரானது மிக சவாலான ஒன்றாக இருக்கப்போவது உறுதி. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வீரர்களின் அறிவிப்பு எப்போது? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் வேலையில் எதிர்வரும் மே 23-ஆம் தேதி இந்திய வீரர்களின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் ஒரு டிராவிட், ஒரு கங்குலி கிடைக்கபோவது உறுதி – பிரவீன் ஆம்ரே

பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்யும் பிரத்தியேக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய நிர்வாகிகள் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement