இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் ஒரு டிராவிட், ஒரு கங்குலி கிடைக்கபோவது உறுதி – பிரவீன் ஆம்ரே

Pravin Amre
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய அணிக்கு புதிய கங்குலி மற்றும் டிராவிட் கிடைப்பாங்க : பிரவீன் ஆம்ரே

ஏனெனில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்டு வெளியேறி உள்ளதால் இளம் வீரர்களை கொண்ட அணியே அங்கு பயணிக்க இருக்கிறது. கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இம்முறை முற்றிலும் இளமையான அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் கூறுகையில் : அனுபவத்தை எந்த சூப்பர் மார்க்கெட்டிலும் வாங்க முடியாது என்றும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களின் அனுபவம் மிகப்பெரியது எனவே அவர்கள் இன்றி இந்த இங்கிலாந்து தொடர் புதிய வீரர்களுக்கு மிகப்பெரிய சவால்தான் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் ஆம்ரே எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு ஒரு சவுரவ் கங்குலி மற்றும் ஒரு டிராவிட் ஆகியோர் கிடைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வந்திருந்தனர். அதே மரபை இளம் வீரர்களும் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருக்காது. ஆனாலும் இந்த தொடரில் பல்வேறு விடயங்களை இளம் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். அதே போன்று இந்த தொடரிலேயே அவர்கள் அனைவரும் சாதிப்பார்கள் என்று நம்பக்கூடாது. பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அனுபவம்தான் மிகப்பெரிய பலம்.

இதையும் படிங்க : சத்தியத்தை காப்பாத்தல.. ஆர்.சி.பி அணியின் மேனேஜ்மென்ட் மீது எனக்கு கோபமும், வருத்தமும் இருந்தது – ரஜத் பட்டிதார் ஓபன்டாக்

இந்த தொடரில் கிடைக்கும் அனுபவங்களை வைத்து அவர்கள் நிச்சயம் வருங்காலத்தில் பிரகாசிக்க அதிக வாய்ப்புள்ளது எனவேதான் சொல்கிறேன் இந்த இங்கிலாந்து தொடரில் நிச்சயம் இந்திய அணிக்காக ஒரு கங்குலி மற்றும் ஒரு டிராவிட் ஆகியோர் கிடைக்க வாய்ப்புள்ளது என பிரவீன் ஆம்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement