வெ.இ அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்திய அணியானது அந்த இறுதிப்போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்புகிறது. அப்படி நாடு திரும்பும் இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு :

இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் துவங்குகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரானது ஆரம்பிக்க சில நாட்களே இருக்கும் வேளையில் இன்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் நிர்வாகம் ஆகியோர் இணைந்து இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

- Advertisement -

அந்த வகையில் வெளியான அறிவிப்பில் : சுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முக்கிய சில மாற்றங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த இங்கிலாந்து தொடரின் போது இடம் பிடித்திருந்த கருண் நாயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணிக்குள் வந்துள்ளார்.

அது தவிர்த்து ஷர்துல் தாகூர் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்னர். அதோடு ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பும்ரா தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்ததால் அவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

மற்றபடி இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த பெரும்பாலோனோர் இந்த தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். அதேபோன்று தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசனுக்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : ஷாகிப் அல் ஹசனை முந்தி வரலாறு படைத்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் – விவரம் இதோ

1) சுப்மன் கில் (கேப்டன்), 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) கே.எல் ராகுல், 4) சாய் சுதர்சன், 5) தேவ்தத் படிக்கல், 6) துருவ் ஜுரேல் (வி.கீப்பர்), 7) ரவீந்திர ஜடேஜா (து.கேப்டன்), 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அக்சர் படேல், 11) நிதீஷ் குமார் ரெட்டி, 12) நாராயணன் ஜெகதீசன், 13) முகமது சிராஜ், 14) குல்தீப் யாதவ், 15) பிரசித் கிருஷ்ணா.

Advertisement