இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு – 16 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி துவங்க உள்ளது. ஏற்கனவே அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து நாடு திரும்பியது.

அதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரில் எந்தெந்த வீரர்களை அணி நிர்வாகம் தேர்வுசெய்து அறிவிக்கப்போகிறது என்பது குறித்து பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த வேளையில் ரோஹித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அதில் பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கே.எல் ராகுல், கே.எஸ் பரத் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : உங்களால முடியும்னு சொல்லி ரோஹித் சர்மா சொன்ன அந்த வார்த்தை.. ஷிவம் துபே நெகிழ்ச்சி – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எல் ராகுல், 7) கே.எஸ் பரத், 8) துருவ ஜூரல், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) ரவீந்திர ஜடேஜா, 11) அக்சர் படேல், 12) குல்தீப் யாதவ், 13) முகமது சிராஜ், 14) முகேஷ் குமார், 15) ஜஸ்ப்ரீத் பும்ரா, 16) ஆவேஷ் கான்.

Advertisement