- Advertisement -
ஆசிய கோப்பை

அடுத்த மேட்ச்லயும் பாகிஸ்தான் அணிக்கு அதே ட்ரீட்மென்ட் தான்.. சூரியகுமார் யாதவ் இதைத்தான் செய்வார் – விவரம் இதோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோசமான சூழல் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி அவர்களுக்கு எதிராக விளையாடுமா? என்ற கேள்வி எல்லாம் இருந்தது.

சூப்பர் 4 சுற்றிலும் இந்திய அணி இதைத்தான் செய்யும் : வெளியான தகவல்

ஆனாலும் ஐசிசி-யின் பொதுவான தொடர் என்பதனாலும் வெளிநாடுகளில் போட்டி நடைபெறுவதாலும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் நகரில் ஏற்படுத்திய தாக்குதல் காரணமாக இந்திய வீரர்கள் யாரும் போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க செல்லவில்லை. அதோடு மைதானத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் போட்டி முடிந்த சில நொடிகளிலேயே பெவிலியனை நோக்கி திரும்பினார். அதே போன்று கேப்டன் சூர்யகுமார் யாதவும் பாகிஸ்தான் கேப்டனுடன் கை கொடுக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவும் பரிசளிப்பு விழாவின் போது பேட்டியில் கலந்து கொள்ளவில்லை. இப்படி பல பரபரப்பான சம்பவங்கள் அந்தப் போட்டியின் போது நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் இந்த செயலுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஐசிசி-யிடம் புகார் அளித்ததோடு சேர்த்து நடுவரையும் நீக்க கோரியும் வேண்டுகோள் வைத்தது.

- Advertisement -

இப்படி பல விடயங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற வேளையில் தற்போது மீண்டும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி செப்டம்பர் 21-ஆம் தேதி துபாய் மைதானத்தில் சூப்பர் 4 சுற்று போட்டியின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. அந்த போட்டியில் என்ன நடக்கும்? என்பது குறித்த சுவாரசியமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : ஓமன் அணிக்கெதிரான போட்டியிலாவது இதை செய்யுங்க.. சஞ்சு சாம்சனுக்காக ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ

அந்த வகையில் ஏற்கனவே லீக் சுற்று போட்டிகளில் நடைபெற்றது போன்றே இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க மாட்டார்கள் என்றும் டாசின் போது கூட நேரடியாக டாஸ் முடிந்த கையோடு கேப்டன் சூரியகுமார் யாதவ் ஓய்வறைக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போதே இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -