INDvsWI : இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா! திட்டமிட்டபடி தொடர் நடைபெறுவதில் சிக்கல் – விவரம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடருக்கான அனைத்து போட்டிகளும் அகமதாபாத் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டு அகமதாபாத் சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டது.

ind

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்த ஒருநாள் தொடரானது திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பயோ பபுளில் தங்க வைக்கப்பட்ட வேளையில் தற்போது அகமதாபாத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர்கள் 4 பேர் மற்றும் 3 நிர்வாகிகள் என ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்னும் பாதிப்பு வீரர்களிடையே அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இன்னும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வேளையில் இந்த ஒருநாள் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

dhawan

அதன்படி இந்திய அணியில் இடம்பெற்றிருந்த துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், வேகப்பந்து வீச்சாளர் முகமது சைனி ஆகிய 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நிர்வாகிகள் தரப்பில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் ஒரு குட்டி சேவாக், அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள் – மைக்கல் கிளார்க்

இதன் காரணமாக தற்போது அந்த 7 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தொடரில் 18 வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளதால் நிச்சயம் திட்டமிட்டபடி இந்த ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement