இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ஆம் தேதியான நேற்று துவங்கியது. நேற்று ஒரே நாள் மூன்று ஆட்டங்கள் நடைபெற்ற வேளையில் நேற்றைய முதல் நாளின் மூன்றாவது ஆட்டமாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டி20 உலககோப்பையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை :
அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது டி20 உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியது.
அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற தென்னாப்பிரிக்கா அணியானது தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றிருந்தது. இதுவே ஒரு டி20 உலக கோப்பை தொடரில் ஒரு அணி அதிகமாக தொடர்ந்து பெற்ற வெற்றியாக இருந்து வந்தது.
இவ்வேளையில் இந்த சாதனையை முறியடித்துள்ள இந்திய அணி நேற்று பெற்ற வெற்றியோடு சேர்த்து மொத்தம் 9 வெற்றிகளை டி20 உலககோப்பையில் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல் 8 போட்டிகளில் விளையாடி கோப்பையை கைப்பற்றியிருந்தது.
இதையும் படிங்க : கவுதம் கம்பீர் கொடுத்த அந்த வார்த்தை தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சூரியகுமார் யாதவ்
வேளையில் தற்போது ஒன்பதாவது ஆட்டத்திலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது சாதனை நிகழ்த்தியுள்ளது. அடுத்ததாக இந்திய அணி நமீபியா அணிக்கு எதிராக பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



