ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 இந்திய அணி அறிவிப்பு.. அணியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் – முழு லிஸ்ட் இதோ

IND vs AUS
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி20 அணி இதோ :

இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதலில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் 16 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2025 ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அந்த அணியில் அப்படியே இடம் பெற்றுள்ளனர். அணியில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களாக ஆசிய கோப்பை தொடரின் போது தசை பிடிப்பினால் கடைசிப் போட்டியிலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தற்போது நிதீஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் இணைந்துள்ளார்.

அதேபோன்று கூடுதல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளார். மற்றபடி ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அதே இந்திய அணியின் வீரர்களே இந்த அணியிலும் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இருக்கும் வேளையில் சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

பந்துவீச்சு துறையில் பலமாக இருக்கும் இந்திய அணி பேட்டிங்கிலும் சரிசமமான பலத்துடன் இருப்பதனால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணியே கைப்பற்றும் என்றே தருகிறது தெரிகிறது. கடைசியாக நடந்த எந்த ஒரு தொடரிலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டாஸ் வின் பண்ணி இப்படி ஆகும்னு நினைக்கல.. இந்தியாவுல இது ரொம்பவே கஷ்டம் – வெ.இ கேப்டன் வருத்தம்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இதோ : 1) சூரியகுமார் யாதவ் (கேப்டன்), 2) அபிஷேக் சர்மா, 3) சுப்மன் கில் (து.கேப்டன், 4) திலக் வர்மா, 5) நிதீஷ் குமார் ரெட்டி, 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) ஜிதேஷ் சர்மா, 9) வருண் சக்கரவர்த்தி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா,11) அர்ஷ்தீப் சிங், 12) குல்தீப் யாதவ், 13) ஹர்ஷித் ராணா, 14) சஞ்சு சாம்சன், 15) ரிங்கு சிங், 16) வாஷிங்டன் சுந்தர்.

Advertisement