IND vs WI : டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத வரலாற்று சாதனையை நிகழ்த்திய – இந்திய அணி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவிக்கவே 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்தது.

Ravi Bishnoi

- Advertisement -

இதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளில் முடிவிலேயே இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் இந்த ஐந்தாவது டி20 போட்டியில் காண இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா கேப்டனாக இந்த போட்டியில் செயல்பட்டார். அதனை தவிர்த்து இந்த போட்டியில் வெறும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இப்படி இந்திய அணி விளையாடிய இந்த போட்டியில் டி20 வரலாற்றில் யாரும் படைக்காத ஒரு உலக சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

Kuldeep Yadav

அந்த சாதனை குறித்த விவரம் தற்போது ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன்படி இந்திய அணி நிகழ்த்திய அந்த சாதனை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியும் தங்களை எதிர்த்து விளையாடிய அணியின் 10 விக்கெட்டுகளையும் தங்களது ஸ்பின்னர்கள் மூலம் வீழ்த்தியது கிடையாது.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தனர். அந்த வகையில் அக்சர் பட்டேல் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னாய் 2.4 ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதையும் படிங்க : IND vs WI : இது பழைய இந்திய டீம் இல்ல. வெற்றிக்கு பிறகு அதிரடியாக பேசிய – கேப்டன் ஹார்டிக் பாண்டியா

இப்படி இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்கள் மட்டுமே இணைந்து எதிரணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களே கைப்பற்றிய முதல் அணியாக இந்திய அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement