போட்டியில் தோற்றாலும் ரசிகர்கள் மனதை வென்ற சஞ்சு சாம்சன் – என்ன ஒரு பக்குவம்

Sakariya
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் விளையாடிய இரு அணி கேப்டன்களும் விக்கெட் கீப்பர்கள். முக்கியமாக கேப்டனாக சஞ்சு சாம்சனுக்கு இதுதான் முதல் போட்டி என்பதால் அணியை எப்படி வழிநடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

rrvspbks

- Advertisement -

பஞ்சாப் அணியின் பலம் வாய்ந்த ஓபனிங் ஆர்டரை இளம் வயது வேகப் பந்து வீச்சாளர் சேட்டன் சக்காரியாவை வைத்து உடைத்தார் சஞ்சு சாம்சன். ஆனால் அதன் பிறகு ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். இருந்தாலும் கேப்டன் பொறுப்பில் இருந்த சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் கோபப்படாமலும் அமைதியாகவும் இருந்தார்.

அத்துடன் கடைசி வரை வீரர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டும் இருந்தார். முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி செட் செய்த 222 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை துரத்தும்போதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ஒரு கேப்டனாக பேட்டிங்கிலும் முன்னின்று அணியை வழிநடத்திச்சென்றார்.

samson

இறுதியாக 63 பந்துகளுக்கு 119 ரன்கள் அடித்து இறுதி பந்தில் அவுட் ஆனார் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் அணி வெற்றி பெறாவிட்டாலும் கேப்டனாக அணியை வழிநடத்திய சஞ்சு சாம்சனின் செயல்பாடு கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியைப் போன்று இருந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Samson-1

ஐபிஎல் தொடங்கும் முன்பே சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட், கேல் ராகுல் போன்ற வீரர்கள் கேப்டன் பொறுப்பில் இருப்பது மகேந்திரசிங் தோனியை அவர்கள் பின்தொடர்வது போல் உள்ளது என்றும் இளம்வீரர்களுக்கு தோனி ஒரு முன்னோடி என்றும் ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement