மும்பையில் நேற்று முதல் குவாரன்டைன். தெ.ஆ தொடருக்கு முன் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை அசத்தலாக கைப்பற்றியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதில் விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் 4 வீரர்களும் ஸ்டேன்ட் பை வீரர்களாகவும் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியானது அறிவிக்கப்படும் போதே ஒருநாள் கிரிக்கெட்டில் விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த தொடருக்கான பயணம் எப்போது இருக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 26ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்காக இந்திய அணி வரும் டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

IND-1

மேலும் இந்த தொடருக்கு முன்னதாக அங்கு பரவி வரும் ஓமைக்கிரான் வைரஸ் காரணமாக தற்போது இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் மும்பையில் தீவிர பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சென்றடைந்து அங்கும் கடுமையான பயோ பபுள் வட்டத்திற்குள் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டன் பதிவில் இருந்து தூக்கியதற்கு பின்னர் விராட் கோலியை சமாதானம் செய்ய – பி.சி.சி.ஐ செய்துள்ள செயல்

அதோடு வெளி நபர்கள் தொடர்பு இன்றி இந்திய வீரர்கள் இந்த தொடர் முழுவதும் இருக்க உள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது 26 ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement