வீடியோ : ஒருநாள் விடுமுறையை ஜாலியாக கடலில் என்ஜாய் செய்த இந்திய வீரர்கள் – இது எல்லாமே அவரோட பிளானாம்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-ஆவது ஆசியக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று “சூப்பர் 4” சுற்று இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் இந்திய அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் பார்க்கையில் எளிதாக இந்த ஆசிய கோப்பை தொடரினை கைப்பற்றி நடப்பு சாம்பியனான அவர்கள் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் தற்போது துபாயில் தங்கி இருக்கும் இந்திய வீரர்களுக்கு அடுத்த போட்டிக்கு முன்னதாக சில நாட்கள் ஓய்வு இருப்பதன் காரணமாக ஒருநாள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அப்படி இந்த ஒரு நாளில் வீரர்கள் பயிற்சி ஏதும் எடுக்காமல் துபாய் கடலில் சர்ஃபிங், பீச் வாலிபால் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஜாலியாக நேரத்தை கழித்தனர்.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் கூறுகையில் : இது எல்லாமே ராகுல் டிராவிட் சாரின் ஐடியா தான். ஏனெனில் தொடர்ச்சியாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றம் விளையாடி வரும் போது இதுபோன்று ஒரு நாளை கழிப்பது வீரர்களுக்கு ஓய்வாகவும், ரிலாக்ஸாகவும் இருக்கும் என்று நம்புகிறார். அதே போன்று எங்களுக்கும் இது சற்று ஜாலியாக இருக்கிறது.

இதையும் படிங்க : அடுத்த வருசம் ஆரஞ்சு தொப்பிக்கு ஆசைப்பட மாட்டார்னு நம்புகிறேன் – நட்சத்திர வீரரை வெளுத்த ஹர்ஷா போக்லே

இங்கு வந்த எல்லோருமே தற்போது மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். வீரர்களுக்கு இடையே இது இன்னும் பிணைப்பை அதிகரிக்கும் என்பதனால் இந்த விடுமுறையை அளித்து டிராவிட் எங்களுக்கு இன்று இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார் என சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement