அடுத்த வருசம் ஆரஞ்சு தொப்பிக்கு ஆசைப்பட மாட்டார்னு நம்புகிறேன் – நட்சத்திர வீரரை வெளுத்த ஹர்ஷா போக்லே

Bhogle
- Advertisement -

2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனாலும் இந்த தொடரில் துணை கேப்டனாக விளையாடி வரும் கேஎல் ராகுல் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முறையே 0, 36 என சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். ஆரம்ப காலங்களில் நிலையான இடத்தை பிடிக்க தடுமாறிய இவர் கடந்த 2019 உலகக்கோப்பையில் காயத்தால் வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதில் கிடைத்த வாய்ப்பில் அந்த இடத்தை தனதாக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு ரோகித் சர்மாவின் லேட்டஸ்ட் ஓப்பனிங் பார்ட்னராக நிரந்தரமான இடத்தைப் பிடித்தார்.

KL Rahul

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு ஐபிஎல் தொடரில் 500, 400 போன்ற ரன்களை மலையாக குவிக்கும் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்த இவர் 17 கோடி என்றளவுக்கு தனது மார்க்கெட்டை உயர்த்தினார். அதன் பயனாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக சம்பளத்திற்கு விளையாடிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்து லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார்.

சுயநலமான ராகுல்:
அதன்பின் நடைபெற்ற தென் ஆப்ரிக்க தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட இருந்த அவர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் விலகியிருந்த நிலையில் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கடைசி நேரத்தில் குணமடைந்ததால் தவானுக்கு பதில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்தத் தொடரில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டான அவர் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது பெரிய பின்னடைவை கொடுத்தது. அதைவிட கத்துக்குட்டியான ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி 36 ரன்களை எடுத்து இந்தியாவை 200 ரன்களை தொட விடாமல் மீண்டும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

Rahul

ஆரம்ப காலங்களில் அதிரடியாக செயல்பட்ட இவர் நாட்கள் செல்ல செல்ல தனது மார்க்கெட்டையும் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுக்கும் முயற்சியில் இப்படி குறைவான ஸ்டிரைக் ரேட்டில் சுயநலத்துடன் விளையாட துவங்கியுள்ளதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார்கள். குறிப்பாக தனது அணி தோற்றாலும் பரவாயில்லை ஆரஞ்சு தொப்பியை வென்று மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவர் விளையாடினார் என்பது ரசிகர்களின் பல விமர்சனங்களில் ஒன்றாகும்.

- Advertisement -

ஆரஞ்சு தொப்பி:
இத்தனை நாட்கள் அதை ரசிகர்கள் விளையாட்டாக விமர்சித்த நிலையில் தற்போது இந்தியாவின் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே நேரடியாகவே விமர்சித்துள்ளார். நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கு பின்பும் கேஎல் ராகுல் இதே போல் விளையாடினால் அவரது இடத்தை பற்றி அனைவரும் நியாயமான கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Rahul

“ஹாங்காங் அணிக்கு எதிராக இன்று அவர் விளையாடியது பரவாயில்லை. ஆனால் அதற்காக 39 பந்துகள் எடுத்துக்கொண்டது அதிகப்படியாகும். ஏனெனில் ஹாங்காங்குக்கு எதிராக நீங்கள் வெல்வீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி கூட தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக விளையாடினார். ஆனால் 38வது பந்தை எதிர்கொண்ட போது கூட ஆரம்ப காலத்தில் விளையாடியது போல் ராகுல் விளையாடவில்லை. எனவே அவர் இதை சரிசெய்ய தீவிர வலைப்பயிற்சி செய்வார் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் இந்த தலைமுறையில் மிகச்சிறந்த வீரரான கேஎல் ராகுல் போன்றவர் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கி தடுமாறுவதை நான் பார்க்கிறேன். ஒருவேளை அவர் எதையும் நினைத்து பயப்படுகிறாரா என்று நான் ஆச்சர்யப்படுகிறேன். அவரளவுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் நான் விளையாடியதில்லை என்றாலும் அவர் தைரியமாக விளையாட பயப்படுகிறாரா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் விளையாடுவதை பார்க்கும்போது அவுட்டானால் நான் கவலைப்பட மாட்டேன் என்ற வகையில் இல்லை”

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

“மேலும் அடுத்த வருடம் அவர் ஆரஞ்சு தொப்பியை பற்றி கவலைப்பட மாட்டார் என்று நம்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த ஆசிய கோப்பைக்கு பின்பும் கேஎல் ராகுல் இதே போல் விளையாடினால் அவரது இடத்தைப் பற்றி தேர்வு குழுவிடம் நாம் கேள்வி எழுப்புவோம். இந்த ஆசிய கோப்பையில் 4 போட்டிகளுக்கு பின்பும் அவர் ஃபார்முக்கு திரும்பவில்லையெனில் நிச்சயமாக பெரிய கேள்வி உருவாகும். அது நடந்தால் நான் வருத்தமடைவேன்” என்று கூறினார்.

Advertisement