- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்தது எல்லாம் ஓகே தான். ஆனால் இந்த தப்பை எப்போ மாத்துவீங்க – விவரம் இதோ

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 334 ரன்களை குவிக்க ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு கேட்ச்களை தவிறவிட்டுள்ளனர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை எண்ணிக்கையை நிர்ணயித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்ச்களை தவறவிட்டு இருக்கின்றனர். இதில் ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களையும் ரோகித் சர்மா மற்றும் விஹாரி தலா ஒரு கேட்ச்களையும் கோட்டை விட்டிருக்கின்றனர்.

முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் புகோவிஸ்கியின் இரண்டு கேட்ச்களை தவிறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இதன் காரணமாக புகோவிஸ்கி 62 ரன்களை குவித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் பும்ரா வீசிய ஓவரில் போது இரண்டு கேட்ச்களை தவிறவிட்டுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 9 கேட்ச்களை விட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வகையான தொடர்களையும் சேர்த்து இந்திய வீரர்கள் 22 கேட்ச்களை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by