ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் பேட்ஸ்மேன்கள் வெளியிட்ட தரவரிசை பட்டியல் – ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

IND
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது ஒருநாள் பேட்டிங், பவுலிங் மற்றும் அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர். ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத் தொடரில் விராட் கோலி ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இரண்டு அரை சதங்கள் விளாசினார்.

Kohli 1

இதன் மூலம் தற்போது ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு இந்திய அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 842 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்றாலும் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடித்து இருக்கிறார்.

- Advertisement -

மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் 837 புள்ளிகள் பெற்று இருக்கிறார். நான்காவது இடத்தில் 818 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து வீரர் ரோஸ் டைலர் மற்றும் ஐந்தாம் இடத்தில் 791 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் இடம் பிடித்து இருக்கின்றனர்.
இதையடுத்து ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 722 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

Rohith

இரண்டாவது இடத்தில் 708 புள்ளிகள் பெற்று ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் மூன்றாவது இடத்தில் 700 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் பும்ரா இடம் பிடித்து இருக்கின்றனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் 420 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

Bumrah

இவரைத் தொடர்ந்து முகமது நபி(294) கிறிஸ் வோக்ஸ்(281), பென் ஸ்டோக்ஸ்(276) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இதில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 253 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement