பி.சி.சி.ஐ வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் – பின்னடைவை சந்திக்கப்போகும் சீனியர்கள்

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் 2025-26 வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. புதிய பயிற்சியாளராக கம்பீர் மற்றும் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் ஆகியோர் பதவி ஏற்றதற்கு பின்னர் தற்போது முதல் முறையாக வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியல் வெளியாகவுள்ளது.

பி.சி.சி.ஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள் :

இந்த வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலில் இம்முறை பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காததால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்ட வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கம்பேக் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு மீண்டும் சென்ட்ரல் காண்டாக்ட் வழங்கப்பட காத்திருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் இஷான் கிசான் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும்ம் சீனியர் வீரர்களான விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் கடந்த ஆண்டு ஏ ப்ளஸ் பிரிவில் 7 கோடி ரூபாய் என்கிற அதிக சம்பளத்தை பெற்று வந்த வேளையில் அவர்கள் மூவருமே டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் ஏ கிரேட்டிற்கு தகுதி இறக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஏனெனில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே உயர் ஒப்பந்த ஊதிய பிரிவான ஏ ப்ளஸ் பிரிவில் இடம் கிடைக்கும். அந்த வகையில் பார்க்கையில் சீனியர் வீரர்களுக்கு பின்னடைவு ஏற்படப்போவது உறுதி. மேலும் சமீப காலமாகவே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் ஹர்ஷித் ராணா, அபிஷேக் ஷர்மா, நிதிஷ்குமார் ரெட்டி போன்ற வீரர்களுக்கு புதிதாக சி பிரிவில் காண்ட்ராக்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இவர்கள் அனைவருமே தொடர்ச்சியாக இந்திய அணிக்காக இடம் பிடித்து வருவதால் இவர்களுக்கு காண்ட்ராக்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறப்பாக விளையாடி வரும் சில வீரர்களுக்கு கிரேடு உயர்வும் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எந்தெந்த வீரர்கள், எந்தெந்த பிரிவில் இடம்பிடிக்க போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : அவரோட இடத்தை நிரப்புவது கஷ்டம் தான்.. ஆனாலும் சூப்பரா ஆடிட்டேன் – மொயின் அலி மகிழ்ச்சி

இந்த சம்பள பட்டியலுக்கான ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் 7 கோடி ரூபாய் சம்பளமும், ஏ பிரிவில் இடம் பிடிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம் பிடிப்பவர்களுக்கு 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிப்பவர்களுக்கு 1 கோடி என வீரர்களின் தகுதிக்கு ஏற்ப சம்பள ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement