IND vs WI : வெ.இ அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் உட்பட ஓய்வளிக்கப்பட்ட 7 சீனியர் வீரர்களின் – லிஸ்ட் இதோ

INDvsWI
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முடித்துள்ள வேளையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடர்களையும் அடுத்து இங்கிலாந்தில் இருந்து இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு செல்லும் இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

INDvsWI

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா உட்பட சீனியர் வீரர்கள் 7 பேருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பினையும் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவானும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவானின் கீழ் முற்றிலுமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் 7 பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோஹித் உட்பட ஓய்வு அளிக்கப்பட்டுள்ள அந்த ஏழு வீரர்களின் லிஸ்ட் இதோ :

rohith

1) ரோஹித் சர்மா, 2) விராட் கோலி, 3) ரிஷப் பண்ட், 4) ஹார்டிக் பாண்டியா, 5) ஜஸ்ப்ரீத் பும்ரா, 6) முகமது ஷமி, 7) கே.எல் ராகுல் ஆகிய 7 வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதற்காக இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் கே.எல். ராகுல் மட்டும் காயம் காரணமாக இந்த தொடரில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதோடு இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் குறித்த தகவலும் தெளிவாக அளிக்கப்படவில்லை. மற்றபடி இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் பலரும் இளம் வீரர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வெ.இ அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 16 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து தொடர்ச்சியாக இந்திய அணி அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருவதால் கடந்த சில மாதங்களிலேயே அதிக அளவில் கேப்டன் மாற்றம் மற்றும் வீரர்கள் மாற்றம் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இதோ :

1) ஷிகார் தவான், 2) ரவீந்திர ஜடேஜா, 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) தீபக் ஹூடா, 6) சூரியகுமார் யாதவ், 7) ஷ்ரேயாஸ் ஐயர், 8) இஷான் கிஷன், 9) சஞ்சு சாம்சன், 10) ஷர்துல் தாகூர், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) அக்சர் படேல், 13) ஆவேஷ் கான், 14) பிரசித் கிருஷ்ணா, 15) முகமது சிராஜ், 16) அர்ஷ்தீப் சிங்.

Advertisement