வெ.இ அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 16 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

INDvsWI
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ள வேளையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடரிலும் விளையாடி முடித்த கையோடு நேரடியாக இங்கிலாந்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க இருக்கிறது.

இந்த தொடருக்கான ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடிய வேளையில் தற்போது மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள இந்த 16 பேர் கொண்ட அணியில் தவான் கேப்டனாகவும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா ஆகியோருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்றோரும் அணியில் தேர்வாகியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஏழு முன்னணி சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது முற்றிலுமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க உள்ளது. அதன்படி பி.சி.சி.ஐ மூலம் அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி இதோ :

இதையும் படிங்க : IND vs ENG : வரலாற்று தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவு. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்தியா செய்யவேண்டியது இதோ

1) ஷிகார் தவான், 2) ரவீந்திர ஜடேஜா, 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) தீபக் ஹூடா, 6) சூரியகுமார் யாதவ், 7) ஷ்ரேயாஸ் ஐயர், 8) இஷான் கிஷன், 9) சஞ்சு சாம்சன், 10) ஷர்துல் தாகூர், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) அக்சர் படேல், 13) ஆவேஷ் கான், 14) பிரசித் கிருஷ்ணா, 15) முகமது சிராஜ், 16) அர்ஷ்தீப் சிங்.

Advertisement