நியூசிலாந்து அணிக்கெதிராக மோசமான சாதனையை கையில் வைத்திருக்கும் இந்தியா – அய்யய்யோ இதுவேறயா?

Williamson
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

Hafeez

அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கெதிராக ஒரு மோசமான சாதனையையும் இந்திய அணி தங்கள் கைவசம் வைத்துள்ளது. அந்த விடயம் யாதெனில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியதே கிடையாது. இது மட்டுமில்லாமல் கடந்த சில காலங்களில் ஐசிசி நடத்திய எந்த ஒரு போட்டியிலும் நியூசிலாந்து அணியை இந்திய அணியை வீழ்த்தியதில்லை.

- Advertisement -

குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் என முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்து அணி தான் இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இதனால் இந்த சில புள்ளிவிவரங்கள் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன.

NZvsIND

ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரில் 2007ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் அந்த தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எந்த ஒரு t20 உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது கிடையாது.

இதையும் படிங்க : செலக்ட்டர்ஸ் வேணானு தான் சொன்னாங்க. ஆனா தோனி தான் அவருக்கு சப்போர்ட் பண்ணாரு – அதுதான் தப்பா போச்சி

எனவே இந்த வரலாற்றை மாற்றி எழுத நிச்சயம் இந்திய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகவேண்டும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எவ்வளவு பலமாக உள்ளதோ அதே அளவிற்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலமாக உள்ளது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி சுவாரசியமாக அமையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement