செலக்ட்டர்ஸ் வேணானு தான் சொன்னாங்க. ஆனா தோனி தான் அவருக்கு சப்போர்ட் பண்ணாரு – அதுதான் தப்பா போச்சி

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணியானது சூப்பர் 12- சுற்றில் நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்திய அணியானது ஞாயிற்றுக்கிழமை தங்களது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

INDvsPAK

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஹார்டிக் பாண்டியா இடம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்துவரும் பாண்டியா பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இருக்கிறார். தற்போது நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா இரண்டாவது இன்னிங்சின் போது காயம் காரணமாக பீல்டிங் செய்ய கூட வரவில்லை. இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் மீண்டும் தற்போது அவர் பந்துவீச தயாராகிவிட்டார் என்பதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் இடம் தேவையில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்துக்களும் பலமாக எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இடம் குறித்து பேசியுள்ள பெயர் குறிப்பிடப்படாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pandya 1

ஐபிஎல் தொடரில் பாண்டியா பந்து வீசாததால் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என்றே தேர்வாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் தோனியின் சப்போர்ட்டினால் தான் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. மேலும் ஹர்டிக் பண்டியா சிறந்த பினிஷர் என்பதனால் அவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் எனவும் தோனி விரும்பியதாக அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : குழந்தை பிறந்ததில் கூட இப்படி ஒரு அதிர்ஷ்டமா ? மூவர் ஐவரானோம் – மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்

ஆறு மாதங்களாக பாண்டியாவின் உடல்தகுதி கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது தவறு. அவருக்கு பதிலாக நல்ல தகுதியுள்ள வீரரை அணியில் சேர்த்திருக்கலாம். பார்ம் இழந்து இருக்கும் அவருக்கு பதிலாக நன்றாக விளையாடும் வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டினை அவர் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement