இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று போட்டியானது முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி முடித்த வேளையில் இந்திய அணி 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது.

அதன்படி 2-வது இன்னிங்சை இன்று விளையாடி முடித்த இந்திய அணியானது 266 ரன்களை குவித்தது. இதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக 240 ரன்கள் என்பது நான்காவது இன்னிங்சில் வெற்றிக்கு போதுமான ரன்கள் தான்.
அதேபோன்று 4-ஆவது இன்னிங்சில் இவ்வளவு ரன்கள் அடிப்பது கடினம் என்றாலும் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பான துவக்கத்தை கண்டுள்ளது. தற்போது வரை 100 ரன்களை நெருங்கிய நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து உள்ளதால் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 140 ரன்கள் மட்டுமே தேவை. அதுமட்டுமின்றி இரண்டு நாட்கள் ஆட்டம் முழுவதும் மீதம் இருப்பதால் நிச்சயம் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் கையே தற்போது வரை ஓங்கியுள்ளது.

ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் மூன்றாம் நாள் ஆட்டம் முடியும் வரை தென் ஆப்பிரிக்க அணியை பெரிதளவில் ரன் குவிக்க விடாமல் தடுக்க வேண்டும் அப்படி தடுத்தால் நான்காம் நாள் ஆட்டத்தில் காலையிலேயே விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
இதையும் படிங்க : இப்படிலாம் அவுட் ஆகுறது ஏத்துக்கவே முடியாது. பொறுப்பில்லாம ஆடுறாரு – இளம்வீரரை கடிந்த கவாஸ்கர்
அப்படி நான்காம் நாள் ஆட்டத்தில் காலையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினால் மட்டுமே தென்ஆப்ரிக்க அணியை வீழ்த்த முடியும். இல்லையெனில் தென்னாப்பிரிக்க அணியே இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



