இப்படிலாம் அவுட் ஆகுறது ஏத்துக்கவே முடியாது. பொறுப்பில்லாம ஆடுறாரு – இளம்வீரரை கடிந்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று மூன்றாம் நாளாக சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி முடித்தன. முதல் இன்னிங்ஸின் முடிவில் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியானது நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்திருந்தது.

pujara 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியானது ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல ரன் குவிப்பில் ஈடுபட்டது. ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்கள் குவிக்க இந்திய அணி ஒரு கட்டத்தில் நல்ல இலக்கினை நோக்கி நகர்ந்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் களமிறங்கியதும் அணியின் நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் விளையாடி தான் சந்தித்த 3வது பந்திலேயே இறங்கி வந்து தூக்கி எடுக்க ஆசைப்பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அஷ்வினும் 16 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி நெருக்கடியை சந்தித்தது. இறுதியில் இந்திய அணி எப்படியோ தாக்குப் பிடித்து இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களை குவித்தது.

pant

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் குறித்து கடிந்துள்ள கவாஸ்கர் கூறுகையில் : டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போன்று தான் விளையாடுவேன் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அவுட் ஆனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணியில் இருந்து நீக்க இதுவே காரணம் – ஜாஹீர் கான் பேட்டி

ஏனெனில் இது ஒரு முட்டாள்தனமான முடிவு. இயற்கையான ஆட்டம் என்று கூறி இல்லாத ஆட்டத்தை விளையாடுவது அவசியமில்லாத ஒன்று அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கவாஸ்கர் காட்டமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement