பி.சி.சி.ஐ வரலாற்றிலே இதுதான் முதல் முறை. இந்திய வீரர்களுடன் பறக்கவுள்ள மற்றொரு டீம் – யார் தெரியுமா ?

IND
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் மாதம் 18ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரை எதிர்கொள்ள உள்ளதால் கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தையும் அழைத்துச்செல்ல பிசிசிஐ சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று(மே 18) மும்பையில் இணைந்து 14 நாட்கள் குவாரன்டைனை துவங்கியுள்ளனர். இந்த அணியில் 20 வீரர்கள் மற்றும் நான்கு மாற்று வீரர்கள் என 24 பேர் இங்கிலாந்திற்கு ஜூன் இரண்டாம் தேதி செல்ல உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய ஆண்கள் அணியுடன், இந்திய மகளிர் அணியும் ஒரே விமானத்தில் செல்லும் என்று பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இந்திய ஆண்கள் அணி போன்று பெண்கள் அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளதால் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரண்டு அணிகளையும் தற்போது ஒரே விமானத்தில் அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

womens ind

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு அணிகளையும் ஒரே விமானத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கு அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மும்பையில் தற்போது இருக்கும் இரு அணி வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் அந்த மூன்று முடிவுகளிலும் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்து செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

womens ind 1

அப்படி யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டால் அவர்கள் நிச்சயம் இங்கிலாந்து செல்ல மாட்டார்கள் என்று ஏற்கனவே பிசிசிஐ தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement