IND vs AFG : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

INDvsAFG
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்று போட்டிகளின் முடிவில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் “சூப்பர் 4” சுற்றுக்கான ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியானது இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

இந்நிலையில் இந்திய அணியானது “சூப்பர் 4” சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்படி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கேப்டன் ரோகித் சர்மா அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார்.

அதேபோன்று கடந்த போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மூன்று வீரர்களாக தீபக் சாகர், தினேஷ் கார்த்திக் மற்றும் அக்ச்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி விட்டதால் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி விளையாடும் என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த வகையில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக விளையாட தகுதியுடைய 4 இளம் சிறந்த வீரர்கள்

1) கே.எல் ராகுல் 2) விராட் கோலி, 3) சூரியகுமார் யாதவ், 4) ரிஷப் பண்ட், 5) தீபக் ஹூடா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) தீபக் சாகர், 10) புவனேஷ்வர் குமார், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement