ஆசிய கோப்பையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக விளையாட தகுதியுடைய 4 இளம் சிறந்த வீரர்கள்

Rahul-1
Advertisement

ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா இதர அணிகளைக் காட்டிலும் பலமான அணியாகவும் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாகவும் திகழ்வதால் எளிதாக வென்று கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வழக்கமான வேலையை காட்டிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வீட்டுக்கு கிளம்ப தயாராகியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், சுமாரான கேப்டன்ஷிப், தவறான அணி தேர்வு, வீரர்களை சரியாக பயன்படுத்தாதது போன்ற அம்சங்கள் காரணமாகிறது.

KL Rahul

அதில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுலின் ஆமைவேக ஆட்டம் முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. 2019க்குப்பின் விராட் கோலியை மிஞ்சும் ரன் மெஷினாக உருவெடுத்த இவருடைய ஐபிஎல் சம்பளம் 17 கோடியை எட்டியதால் அதை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் இவர் சமீப காலங்களில் அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்று சுயநலத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.

- Advertisement -

4 பேட்ஸ்மேன்கள்:
ஐபிஎல் 2022 தொடருக்கு பின் காயத்தால் வெளியேறி மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 1, 30 ரன்கள் ஹாங்காங்க்கு எதிராக 36 (39) ரன்கள் பலவீனமான அணிகளுக்கு எதிராக கூட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இதனால் அணியிலிருந்து நீக்குமாறு நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இவருக்கு பதில் ஆசிய கோப்பையில் விளையாட தகுதியுடைய 4 இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்:

Deepak Hooda 104

1. தீபக் ஹூடா: இந்த ஆசியை கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பிடித்திருந்த இவர் பெரும்பாலும் டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன் என தெரிந்தும் தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டு அவரது இடத்தில் பயன்படுத்தி ரோகித் சர்மா மோசமான கேப்டன்ஷிப் செய்தார்.

- Advertisement -

சமீபத்திய ஐபிஎல் தொடரில் 3, 4 ஆகிய இடங்களில் விளையாடிய இவர் அதன்பின் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி முதல் போட்டியில் 47* (29) ரன்களையும் 2வது போட்டியில் முதல் முறையாக சதமடித்து 104 (57) ரன்களும் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். எனவே தற்போது நல்ல பார்மில் இருக்கும் இவர் ராகுலின் இடத்தில் களமிறங்கியிருந்தால் நிச்சயம் ஹாங்காங், இலங்கை போன்ற அணிகளை பந்தாடியிருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

Sanju Samson

2. சஞ்சு சாம்சன்: 2015 முதல் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாமல் அநீதியை சந்தித்து வரும் இவரும் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன்பின் நடைபெற்ற அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் நிலையற்ற வாய்ப்புகளை பெற்று கிடைத்த வாய்ப்புகளில் அசத்தினார்.

- Advertisement -

பொதுவாக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய இவர் அயர்லாந்து டி20 தொடரில் தொடக்க வீரராக தீபக் ஹூடாவுடன் களமிறங்கி 176 ரன்கள் சாதனை ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரைசதம் அடித்து 77 (42) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். எனவே ஓப்பனிங் இடத்திலும் விளையாடும் திறமை பெற்றுள்ள இவரை ராகுலுக்கு பதில் தொடக்க வீரராக பயன்படுத்தியிருக்கலாம்.

Ishan Kishan 79

3. இஷான் கிசான்: ஐபிஎல் 2022 தொடரில் 15 கோடி என்ற அதிகப்படியான விலையால் ஏற்பட்ட அழுத்தத்தில் திண்டாடிய இவர் அதிலிருந்து வெளிவந்ததுமே நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

மேலும் ஆரம்பம் முதலே தொடக்க வீரராக விளையாடி வரும் இவரை இந்த ஆசிய கோப்பையில் பயன்படுத்தியிருந்தால் நிச்சயமாக ராகுல் போல அல்லாமல் 4இல் 2 போட்டிகளிலாவது வெற்றி பெறும் அளவுக்கு தாக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பார்.

shaw

4. பிரிதிவி ஷா: குட்டி சேவாக் என்று ரசிகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் அழைக்கப்படும் இவருக்கு அறிமுகமான டி20 போட்டிக்கு பின் மேற்கொண்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக ஒதுக்கப்பட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரில் 10 போட்டிகளில் 283 ரன்களை 152.67 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார்.

இதையும் படிங்க : உங்க சோதனையெல்லாம் போதும், மாற்றம் செய்யாமல் இருந்தாலே வெற்றி வரும் – டிராவிட், ரோஹித்தை சாடும் இந்திய வீரர்

தற்போதைய அணியில் தேர்வு செய்யும் அளவுக்கு உத்தேச பட்டியலில் கூட இல்லை என்றாலும் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ள இவரை இந்த ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுக்கும் வகையில் தேர்வு செய்திருக்கலாம்.

Advertisement