ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய அணி – முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா ?

Ind-lose
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் அணிகளை வைத்து தரவரிசைப் பட்டியலை வெளியிடும் வழக்கத்தினை வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Williamson

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை 1 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இதனால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது சரிவை சந்தித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி 4-வது இடத்தையும், பாகிஸ்தான் அணி 5வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தரவரிசை பட்டியலில் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

Nz vs Eng

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரை கைப்பற்றிய அவர்கள் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

IND

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றியை பெற்று மீண்டும் தரவரிசை பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் என்பதனாலும், இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதனாலும் இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement