- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த கொஞ்ச நேரத்திலேயே 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி – என்ன நடந்தது?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று மதியம் ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து வடிவத்திலும் இந்திய அணி முதலிடம் பிடித்த வேளையில் அடுத்த சிலமணி நேரங்களிலேயே இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மட்டும் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

அதன்படி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 115 புள்ளிகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 114 புள்ளிகள், டி20 கிரிக்கெட்டில் 267 புள்ளிகள் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த தரவரிசை பட்டியல் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் வெளியான தரவரிசை பட்டியலில் இரவு ஏழு மணி அளவில் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் ஐசிசி மீண்டும் ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணி 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. இப்படி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம் நடக்க காரணம் யாதெனில் : ஐசிசி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால் இந்தியா முதலிடம் பிடித்ததாகவும், அது சரி செய்யப்பட்டு மீண்டும் ஆஸ்திரேலியா அணி முதலிடம் பெற்றுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க : IND vs AUS : மழை வந்தா தான் உண்டு, உங்களால ஒரு மேட்ச் ஜெயிக்க முடியுமானு பாருங்க – ஆஸியை எச்சரித்த முன்னாள் நியூசி வீரர்

ஆனால் இந்த மறு பதிவிலும் அவர்கள் தவறு செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலியா அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்காது என்றும் 122 புள்ளிகளுடன் தான் முதலிடத்தில் இருக்கும் என்றும் சில இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by