IND vs AUS : மழை வந்தா தான் உண்டு, உங்களால ஒரு மேட்ச் ஜெயிக்க முடியுமானு பாருங்க – ஆஸியை எச்சரித்த முன்னாள் நியூசி வீரர்

IND vs AUS Siraj SMith
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – காவஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட அந்த அணி கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக பிட்ச் பற்றி விமர்சித்த ஆஸ்திரேலியா செயலில் படுமோசமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் தேசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி அசத்தல் வெற்றி பெற்றது.

IND vs AUS Steve SMith

- Advertisement -

அதனால் அவமானத்தை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. ஆனால் முதல் போட்டியில் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்து 2வது இடத்திற்கு சரிந்து மற்றுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே 2016 – 2021 வரை விராட் கோலி தலைமையில் தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியா அவர் விலகிய பின் சந்தித்த சில தோல்விகளால் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்தாலும் மீண்டும் அதை தன்வசமாக்கியுள்ளது.

மழை வந்தா தான் உண்டு:
மேலும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்து தென் ஆப்பிரிக்காவின் (2014இல்) உலக சாதனையும் சமன் செய்துள்ளது. அத்துடன் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Alex Carey

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய அணியினர் நம்பிக்கை தெரிவித்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார். சொல்லப்போனால் ஒரு வெற்றி பெறுவதே கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வென்றால் கூட நான் ஆச்சரியப்படுவேன். இத்தொடரில் மழை ஏதுவும் வராமல் போனால் நிச்சயமாக 4 – 0 (4) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது”

- Advertisement -

“ஒருவேளை பந்து வீச்சில் மேஜிக் நிகழ்த்தி அல்லது ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியை பதிவு செய்ய முடியும். இருப்பினும் 3 – 1 அல்லது 4 – 0 என்ற கணக்கில் இந்தியாவில் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பிட்ச்களை பற்றி அதிகமாக பேசுகிறார்கள். என்னை பொறுத்த வரை அவை அனைத்தும் விளம்பரத்திற்கானது என்று நினைக்கிறேன்”

Simon Doull

“அதே சமயம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தங்களுக்கு சாதகமான பிட்ச் அமைக்கவில்லை என்று என்னிடம் சொல்ல முடியாது. மேலும் பிட்ச் சுமாராக இருந்தாலும் முதல் நாளிலேயே சுழன்றாலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஏனெனில் இப்போதுள்ள வீரர்கள் லாரா, சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போல தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்வதில்லை”

இதையும் படிங்க:அவருடன் ஈகோ பிரச்சனை, தான் இல்லாம மொத்த இந்தியாவும் இல்லன்னு கர்வம் கொண்டதால் தூக்கிட்டோம் – சேட்டன் சர்மா

“சொல்லப்போனால் இப்போதுள்ள இந்திய வீரர்கள் கூட தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். இருப்பினும் உலகின் மற்ற நாடுகளை பொறுத்த வரை அவர்கள் ஓரளவு சிறப்பாக செயல்படுவதாலேயே சொந்த மண்ணில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. எனவே பிட்ச் எப்படி இருந்தாலும் எப்போதும் நான் அதைப் பற்றி குற்றம் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

Advertisement