அவருடன் ஈகோ பிரச்சனை, தான் இல்லாம மொத்த இந்தியாவும் இல்லன்னு கர்வம் கொண்டதால் தூக்கிட்டோம் – சேட்டன் சர்மா

chetan sharma
- Advertisement -

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா பிரபல தொலைக்காட்சியில் ரகசிய கேமரா இருப்பது தெரியாமலேயே இந்திய கிரிக்கெட்டின் பின்புறத்தில் நடைபெறும் நிறைய குளறுபடியான உண்மைகளை பேசியுள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக முழுமையாக ஃபிட்டாகாத வீரர்கள் ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணியின் தேர்வு பற்றி தமது வீட்டுக்கே வந்து பேசியதாகவும் அவர் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் உச்சகட்டமாக கங்குலி – விராட் கோலி ஆகியோரிடையே விரிசல் என்று கடந்த வருடம் வதந்திகளாக மட்டுமே வந்த செய்திகளை தற்போது அவரால் 100% உறுதியாகியுள்ளது.

CHetan Sharma

- Advertisement -

முன்னதாக உலகக் கோப்பை வென்று தரவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் அவரது தலைமையில் துபாயில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக தோற்று படுதோல்வியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த தேர்வு குழுவினர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியையும் பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

கோலியின் கர்வம்:
அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டதாக சௌரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால் யாரும் தன்னிடம் அவ்வாறு கேட்டுக் கொள்ளவில்லை என்று மறுத்த விராட் கோலி மறுத்தார். இருப்பினும் உண்மையிலேயே சவுரவ் கங்குலி அவ்வாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்த சேட்டன் சர்மா விராட் கோலி ஏன் பொய் பேசினார் என்பது புரியவில்லை என்று கூறியிருந்தார்.

Ganguly 1

இந்நிலையில் உலகக்கோப்பை வெல்லவில்லை, பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது என்பதை தாண்டி தாம் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணியும் பிசிசிஐயும் இல்லை என்ற கர்வத்துடன் விராட் கோலி இருந்ததாலேயே அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம் என்று சேட்டன் சர்மா பேசிய மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக கங்குலியுடன் ஈகோ பிரச்சனை இருந்ததாக அந்த வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரர் மிகவும் பிரபலமடையும் போது பிசிசிஐயை விட தம்மை மிகவும் பெரியவர் என்று நினைத்துக் கொண்டார். குறிப்பாக அவரை யாராலும் தொட முடியாது என்று நினைத்தார்”

- Advertisement -

“அதிலும் குறிப்பாக தாம் இல்லையென்றால் இந்தியாவில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் நின்று விடும் என்று விராட் கோலி நினைத்தார். ஆனால் அது எப்போதாவது நடைபெறுமா? ஏனெனில் வரலாற்றில் நம்முடைய சில நட்சத்திர வீரர்கள் வந்து விளையாடி விட்டு சென்றாலும் கிரிக்கெட் அதே நிலைமையில் தான் உள்ளது. எனவே விராட் கோலி அந்த சமயத்தில் தலைவர் கங்குலிக்கு பதிலடி கொடுக்க முயற்சித்தார். அது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலியின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு எதிராக ஒருவர் நடந்து கொள்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது”

Rohit Sharma Chetan Sharma

“ஆனால் தலைவர் பிசிசிஐயை பிரதிபலிப்பவர் அல்லவா? அந்த சமயத்தில் தவறு யார் மீது இருந்தாலும் அது காலப்போக்கில் தீர்மானிக்கப்படும். ஆனால் அதற்காக விராட் கோலி பிசிசிஐயை தாக்கினார். இந்திய வீரர்கள் அதற்கு எதிராக இருந்தார்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால் தங்களது இடம் பறி போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த இடத்தில் தலைவர் மீது தவறு இருந்தாலும் நீங்கள் அவர்களுடைய பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க:ஏலத்தில் எனக்கு கிடைத்த பணத்தில் என் அம்மா அப்பாவிற்கு இதை செய்ய வேண்டும் – ரிச்சா கோஷ் நெகிழ்ச்சி

“அதனால் ரோகித் சர்மா தாமாக ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பேறறார். அந்த சமயத்தில் ஈகோ சண்டை நடந்தது. குறிப்பாக தமது கேப்டன்ஷிப் பறிபோவதற்கு கங்குலி காரணம் என்று நினைத்த விராட் கோலி அவருக்கு பாடத்தை புகட்ட நினைத்தார். ஆனால் வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று தேர்வு குழுவினரான நாங்கள் தான் அந்த முடிவை எடுத்தோம். இருப்பினும் அவர் மீடியாவில் கங்குலி பற்றி அவ்வாறு பேசியது இறுதியில் அவருக்கே பிரச்சனையாக உருவெடுத்தது” என்று கூறினார்

Advertisement