இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி நாளை பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் நகரில் நடைபெற உள்ளது. பரம எதிரிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தோத்தா தான் நல்லா இருக்கும் :
கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்த வேளையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரை கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
இதன் காரணமாக தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் பாகிஸ்தான் அணியை பழி தீர்க்கும் விதமாக நாளை இந்திய அணி அவர்களை வீழ்த்த காத்திருக்கிறது. மேலும் இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த போட்டி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அதுல் வாஸன் பேட்டி அளித்திருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :
நாளை நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த சாம்பியன்ட டிராபி தொடரை மேலும் சுவாரசியமாக்க இந்திய அணி நாளைய போட்டியில் தோற்க வேண்டும். பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்றால் இந்த தொடர் சுவாரசியமாக இருக்காது. எனவே பாகிஸ்தான் அணி வென்றால் இந்த தொடர் மேலும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும்.
இதையும் படிங்க : எப்போவும் மண்டைக்குள்ள இந்தியா தானா? ஆஸி – இங்கிலாந்து தேசிய கீதத்தில் சிக்கிய பாகிஸ்தான்.. கலாய்க்கும் ரசிகர்கள்
அதோடு இந்த தொடரில் சமமான சண்டையும் ஏற்படும். இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைக்கு ஏகப்பட்ட சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சுப்மன் கில் துவங்கி அக்சர் பட்டேல் வரை எட்டாவது வீரர் வரை பேட்டிங் செய்கின்றனர். துபாய் மைதானத்திற்கு தேவையான பிளேயர்களை இந்திய அணி வைத்துள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



