எப்போவும் மண்டைக்குள்ள இந்தியா தானா? ஆஸி – இங்கிலாந்து தேசிய கீதத்தில் சிக்கிய பாகிஸ்தான்.. கலாய்க்கும் ரசிகர்கள்

AUS vs ENG 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அதில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடுகிறது. ஆனால் முதல் போட்டியிலேயே அந்த அணி நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக 22 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் இந்த ஐசிசி தொடரை வெற்றிகரமாக நடத்த அந்நாட்டு வாரியம் பல்வேறு விஷயங்களை செய்தது. குறிப்பாக தங்கள் நாட்டில் உள்ள 3 முதன்மை மைதானங்களையும் பாகிஸ்தான் வாரியம் புதுப்பித்தது. அதன் பின் முதல் போட்டியில் மற்ற 6 நாடுகளின் கொடிகளை பாகிஸ்தான் வாரியம் கராச்சி மைதானத்தில் பறக்க விட்டது.

- Advertisement -

தேசிய கீதத்தில் குழப்பம்:

ஆனால் தங்கள் நாட்டுக்கு வர மறுத்த இந்தியாவின் தேசியக் கொடியை பாகிஸ்தான் வாரியம் புறக்கணித்து விட்டது. அதற்கு விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி லாகூரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டித் துவங்கியது.

அந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக வழக்கம் போல இரு நாடுகளின் தேசிய கீதங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது முதலாவதாக ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக அந்த நேரத்தில் இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கன” பாடலின் சில வார்த்தைகள் சில நிமிடங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

ரசிகர்கள் கிண்டல்:

அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் உடனடியாக கூச்சலை எழுப்பினார்கள். அதனால் சில நிமிடங்களுக்குள் இந்தியாவின் தேசிய கீதம் நிறுத்தப்பட்டு ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்டது. அந்த தருணத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் எப்போதும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் மண்டைக்குள் இந்தியா என்ற எண்ணம் தான் ஓடுமா? என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு அடுத்து 2 ஆவது அணியாக சாம்பியன்ஸ் டிராபியில் சாதனை நிகழ்த்திய தென்னாப்பிரிக்கா – விவரம் இதோ

இத்தனைக்கும் ஃபைனலுக்கு தகுதி பெற்றால் கூட இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் தான் விளையாட உள்ளது. அப்படி இருந்தும் இந்தியாவின் தேசிய கீதத்தை பாகிஸ்தான் மைதான நிர்வாகிகள் வைத்திருப்பது ஆச்சரியத்தையும் கொடுக்கிறது. இதை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

Advertisement