IND vs WI : எப்போ வாய்ப்பு கெடச்சாலும் இப்படித்தான் நடக்குது. சஞ்சு சாம்சனால் – வருத்தமடைந்த ரசிகர்கள்

Sanju-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Pandya-Toss

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது பார்படாஸ் நகரில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 40.5 ஓவர்களிலேயே 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

Samson

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி ஓய்வெடுத்து கொண்டதன் காரணமாக சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக களமிறங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு குறைவான அளவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று ரசிகர்கள் அனைவரும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இதுபோன்று இடையிடையே வாய்ப்பினை சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக வீணடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இன்றைய போட்டியில் கிடைத்த வாய்ப்பில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 19 பந்துகளை மட்டுமே சந்தித்த சாம்சன் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததார்.

இதையும் படிங்க : IND vs WI : வாய்ப்பு கொடுத்தா இப்டியா பண்ணுவீங்க, விராட் – ரோஹித்தை தலைகுனிய வைத்த இளம் வீரர்கள், ரசிகர்கள் ஏமாற்றம்

இப்படி மீண்டும் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை அவர் வீணடித்துள்ளது மீண்டும் அவர்மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே ரசிகர்கள் அவர் மீது வருத்தம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement