ஜோகனஸ்பர்க் மைதானம் ராசி அப்பிடி இப்பிடின்னு சொன்னாங்க. கடைசில இப்படி ஆயிடுச்சி – புலம்பும் ரசிகர்கள்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்று 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டி துவங்கும் முன்னர் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை கைப்பற்ற அருமையான வாய்ப்பு இருந்தது.

thakur 2

- Advertisement -

அதேபோன்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்த மைதானம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் அதன் ராசி எல்லாம் அப்படி தான் இருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டது. ஏனெனில் குறிப்பிட்ட இந்த மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இதுவரை தோற்றதே கிடையாது.

இந்த ஜோகனஸ்பர்க் மைதானத்தில் 5 டெஸ்டில் விளையாடியுள்ள இந்திய அணியானது இரண்டு முறை வெற்றியும், மூன்று முறை டிராவும் செய்துள்ளது. இதன்காரணமாக இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த இரண்டாவது போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

elgar

தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 65 ரன்களே தேவை என்ற நிலையில் 7 விக்கெட் மீதம் இருப்பதால் நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது. இவ்வேளையில் இந்த மைதானம் குறித்த தகவல்களை எல்லாம் வைத்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த மைதானத்தில் இந்தியா தோல்வி அடையாது என்று எதிர்பார்த்தோம் ஆனால் தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அம்மாவின் பிறந்தநாள் அன்று அவருடைய புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி – இவங்க தான் அவரோட அம்மாவா?

அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரர் டீ காக்கும் ஓய்வு பெற்று வெளியேறிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement